×

தேர்தல் ஆணையத்துக்கு கூடுதலாக இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

பெரம்பலூர், ஏப். 23: பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த 18ம் தேதி நடத்தப்பட்ட பெரம்பலூர மக்களவை தேர்தலையொட்டி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சாந்தா முன்னிலையில் 17ம் தேதியன்றே பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 332 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான 664 வாக்குப்பதிவு இயந்திரத்துடன் கூடுதலாக 128 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 332 கட்டுப்பாட்டு கருவிகளுடன், கூடுதலாக 64 கருவிகளும், 332 வி.வி.பேட்டுடன் கூடுதலாக 100 என வி.வி.பேட் கருவிகளும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 320 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான 640 வாக்குப்பதிவு இயந்திரத்துடன், கூடுதலாக 65 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 320 கட்டுப்பாட்டு கருவிகளுடன் கூடுதலாக 59 கருவிகளும், 320 வி.வி.பேடுடன் கூடுதலாக 61 கருவிகளும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு விட்ட நிலையில் வாக்குப்பதிவில் பயன்படுத்தாமல் கையிருப்பில் ரிசர்வுக்காக மாவட்ட அளவில் வைக்கப்பட்டிருந்த மெஷின்கள் அடுத்தகட்ட தேர்தலுக்கு அனுப்புவதற்காக நேற்று சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதன்படி 193 பேலட் யூனிட், 123 கன்ட்ரோல் யூனிட், 161 வி.வி பேட் கருவிகளும் சென்னையில் உள்ள தமிழ்நாடு தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


Tags : EC ,
× RELATED சசி தரூருக்கு தேர்தல் ஆணையம்...