×

இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம் மாணவர் சேர்க்கைக்கு இணைய தளத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

கரூர், ஏப்.23: இலவச , கட்டாயகல்வி உரிமை சட்டம்  மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் 30சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான சேர்க்கை இணையதளம் வழியாக மேற்கொள்ளப்படுகிறது.
22ம்தேதி முதல் மே மாதம் 18ம்தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களுக்கு கரூர் முதன்மைக்கல்வி அலுவலகம், மாவட்டகல்வி அலுவலகம், குளித்தலை மாவட்ட கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலகம், மாவட்டத்தில் உள்ள அனைத்து இசேவை மையங்கள், கரூர், தாந்தோணி, க.பரமத்தி, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகமலை, கடவூர் ஆகிய ஒன்றியங்களில் அமைந்துள்ள வட்டாரக்கல்வி அலுவலகங்களில் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்களின் பெற்றோர் பாஸ்போர்ட் அளவுள்ள போட்டோ, பிறப்பு சான்றிதழ்(அசல்), சாதிசான்றிதழ் (அசல்), நலிவடைந்த வகுப்பினரின் ஆண்டு வருமானம் ரூ.2லட்சத்திற்குள் இருந்தால் வருமானச்சான்று, வருவாய்த் துறையினரால் அளிக்கப்பட்டுள்ள இருப்பிடச்சான்று, குடும்பஅட்டை, வாக்காளர் அடையாளஅட்டை, ஆதார் அட்டைஇவற்றுள் ஏதேனும் ஒன்றில் அசல் ஆகியவற்றுடன் விண்ணப்பங்களை இணைய தளம் வழியாக தரவேற்றம் செய்து ஒப்புகை சீட்டினை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும்தகவல்களை பெற 04324- 255806 என்ற தொலைபேசி எண்ணிற்கு காலை 10மணிமுதல் மாலை 5.45மணிவரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.


Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...