×

சவுளுப்பட்டி, பி.பள்ளிப்பட்டியில் சீரான குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்

தர்மபுரி, ஏப்.23: தர்மபுரி அருகே சவுளுப்பட்டியில் நேற்று குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   
தர்மபுரி மாவட்டம் தடங்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சவுளுப்பட்டி கிராமத்தில், 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக இந்த பகுதியில் ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதில், தடங்கம் ஊராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு  பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் சவுளுபட்டி கிராம மக்கள் தினந்தோறும் ஒட்டப்பட்டி, பழையகுவாட்டர்ஸ், கலெக்டர் அலுவலகம் அருகே குடிநீர் பிடித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ஒட்டப்பட்டியில் இருந்து சவுளுபட்டி செல்லும் கிராம சாலையில் காலி குடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலின் பேரில், அதியமான் கோட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ், ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உடனடியாக சவுளுப்பட்டிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டி: அதே போல் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி அருகே பி.பள்ளிப்பட்டி லூர்துபுரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பொம்மிடி-பாப்பிரெட்டிப்பட்டி சாலையில் காலி குடங்களுடன் மறியல் செய்தனர். தகவலின் பேரில், பொம்மிடி போலீசார் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தசாமி ஆகியோர் விரைவந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசினர். அப்போது, மாலைக்குள் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதன்பேரில் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பாலக்கோடு : பாலக்கோடு பேரூராட்சியில் சுமார் 18வார்டுகள் உள்ளது. இந்நிலையில் 9வது வார்டு பள்ளிக்கூடத்தான் தெருவில் கடந்த 10நாட்களாக, பேரூராட்சி நிர்வாகம் முறையாக தண்ணீர் வழங்கவில்லை. இதனால் குடிப்பதற்கும், இதர தேவைகளுக்கும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் நடவடிக்ைக எடுக்காமல் மெத்தன ேபாக்கு காட்டி வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால், இப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ேபாராட்டம் நடத்த ேபாவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பேரூராட்சியில் சுமார் 18வார்டுகள் உள்ளது.

இந்நிலையில் 9வது வார்டு பள்ளிக்கூடத்தான் தெருவில் கடந்த 10நாட்களாக, பேரூராட்சி நிர்வாகம் முறையாக தண்ணீர் வழங்கவில்லை. இதனால் குடிப்பதற்கும், இதர தேவைகளுக்கும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் நடவடிக்ைக எடுக்காமல் மெத்தன ேபாக்கு காட்டி வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால், இப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ேபாராட்டம் நடத்த ேபாவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Women ,Pallippatti ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது