×

திடீர் சூறைக்காற்றில் மரம் விழுந்து மாடு சாவு: உத்திரமேரூரில் சோகம்

உத்திரமேரூர், ஏப்.23: காஞ்சிபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில், நேற்று திடீரென பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே, வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இந்த வேளையில், நேற்று மதியம் திடீரென உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மேகமூட்டம் சூழ்ந்தது. பின்னர் மிதமான மழை பெய்தது. மழை காரணமாக உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெயில் புழுக்கத்தால் தவித்த மக்கள், திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், கடும் சிரமம் அடைந்தனர்.

இந்நிலையில் உத்திரமேரூர் அடுத்த அழிசூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்வி என்பவரது பசுமாடு மேய்ச்சலுக்கு வயல்வெளி பகுதியில் உள்ள பனைமரம் நிழலில் நேற்று கட்டி வைத்திருந்தார். அப்போது ஏற்பட்ட பலத்த காற்றில் பனைமரம் வேரோடு பெயர்ந்து, மாடு மீது விழுந்தது. இதில், பசுமாடு சம்பவ இடத்திலேயே இறந்தது. இதை அறிந்ததும், அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால், பரபரப்பு நிலவியது.
தகவலறிந்து பெருநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். உத்திரமேரூர் மக்களிடையே பெரிதும் எதிர்பார்த்த மழை பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.

Tags : death ,peasants ,
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...