ரவுடியை வெட்டிய 5 பேர் கைது

திருவொற்றியூர்: பிரபல ரவுடியை வெட்டி கொல்ல முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த பிரபல ரவுடி பாண்டி (33). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த 13ம் தேதி பாண்டி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, 5 பேர் கொண்ட கும்பல் வீடுபுகுந்து, அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். படுகாயமடைந்த பாண்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது.

Advertising
Advertising

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் (24), அருண்ராஜ் (24), பூபதி (20), ராஜா (22), பிரபாகரன் (19) உள்ளிட்ட 5 பேரை, நேற்று முன்தினம் இரவு, கைது செய்தனர். விசாரணையில், ரவுடி பாண்டி தங்களது பகுதியில் தொடர்ந்து அடிதடி, வியாபாரிகளை மிரட்டி மாமூல் வசூல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்ததும், இதை தட்டிக்கேட்ட தங்களை பாண்டி அடிக்கடி தாக்கியும் வந்தார். இதனால்,அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து, வீடுபுகுந்து  வெட்டினோம் என கைதானவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கைதான 5 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் சிறையில் அடைத்தனர்.

Related Stories: