நம்பர் பிளேட்டில் ஆபாச வார்த்தை போதை ஆசாமி மீது வழக்கு

புழல்: மாதவரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் மாதவரம் பால் பண்ணை காவல் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது மின்னல் வேகத்தில் வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது காரின் பின் பக்கத்தில் உள்ள நம்பர் பிளேட்டில் நம்பர் இல்லாமல் ஆங்கிலத்தில் ஆபாச வார்த்தைகள் இருந்தது.

இதனையடுத்து காரை பறிமுதல் செய்து கார் டிரைவரை பிடித்து புழலில் உள்ள மாதவரம் போக்குவரத்து பிரிவு காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், மாதவரம் கே.கே.ஆர்.கார்டன் 3வது தெருவை சேர்ந்த பிராட்போர்ட் ஹெல்ட் (25). என்பதும் அவர் போதையில் வாகனம் ஓட்டியதும் தெரியவந்தது. மேலும் போலீசார் எதற்காக ஆபாசவார்த்தைகள் எழுதப்பட்டது என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: