குல்பி ஐஸ்காரரை தாக்கி வழிப்பறி

அண்ணாநகர்: நெற்குன்றம் மெயின் ரோடு, மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் இருதய நாராயணன் (45). இவர் நேற்று முன்தினம் கோயம்பேடு பகுதியில் நள்ளிரவு 12.30 மணியளவில் தள்ளுவண்டியில் குல்பி ஐஸ் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த 3 சிறுவர்கள் கற்களால் இவரை சரமாரியாக தாக்கி, அவரது சட்டை பையில் இருந்து ரூ.600 ரொக்கத்தை பறித்து கொண்டு தப்பினர். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

Advertising
Advertising

Related Stories: