×

25 ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு கீழக்கடையத்தில் வாறுகால் அமைப்பு

கடையம், ஏப். 23:  கீழக்கடையத்தில், தினகரன் செய்தி எதிரொலியாக வாறுகால் அமைக்கப்பட்டு உள்ளது. 25 ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். கடையம் யூனியனுக்குட்பட்ட கீழக்கடையம் ஊராட்சியில் உடையார் பிள்ளையார் கோயில் தெரு உள்ளது. இந்த தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல முறையான வாறுகால் வசதி இல்லாமல் 25 ஆண்டுகளாக வீடுகளின் முன்பு தேங்கி கிடந்தது. இதனால் இவற்றில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு தொற்றுநோய்களை பரப்பின. மழைக்காலத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டனர். மேலும் தேங்கியுள்ள கழிவுநீரில் பாம்பு, பாம்புராணி போன்ற விஷ ஜந்துகள் புகலிடமாகவும் மாறின. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து தினகரனிலும் செய்திகள் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் முறையான வாறுகால் அமைக்கவும், கழிவுநீரை மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி கொண்டு செல்லவும் தீர்மானித்தனர். இதற்காக ஒன்றிய பொதுநிதி 2018-19ல் இருந்து ரூ.4.36 லட்சம் ஒதுக்கப்பட்டு உடையார் பிள்ளையார் கோயில் தெருவில் புதிய வாறுகால் அமைக்கப்பட்டது. 25 ஆண்டுகளாக கழிவுநீர் தேங்கி அவதிக்குள்ளாகி வந்த மக்கள், தினகரன் செய்தி எதிரொலியாக வாறுகால் அமைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தனர். நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளையும் பாராட்டினர்.

Tags :
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி