×

கலெக்டர் அலுவலக வளாகத்தில் மலை போல குவியும் குப்பை பாம்புகளின் புகலிடமாகிறது

விருதுநகர், ஏப். 23: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் காத்திருப்பு கூடத்தின் அருகே மலை போல குப்பைகள் குவிகின்றன. இவைகளை முறையாக அகற்றாததால், பாம்புகளின் புகலிடமாக மாறி வருகிறது.
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், முதன்மை கட்டிட வளாகம் முதல் அனைத்து கட்டிட வளாகத்திலும் குப்பைகள் குவிக்கப்படுகின்றன. இவைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலக கட்டிட வளாக பகுதிகள் புதர்மண்டி, கழிவுநீர் தேங்குகிறது. கலெக்டர் அலுவலக முதன்மை வளாக கட்டிடங்கள் மட்டும் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகின்றன. ஆனால், கருவூலத்துறை, கல்வி மற்றும் சுகாதாரத்துறை கட்டிட வளாகங்கள் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் பாழடைந்து கிடக்கின்றன. இவற்றில் முதன்மை கல்வி அலுவலக மற்றும் சுகாதார அலுவலக வளாக கட்டிடத்தில் கழிப்பறை முதல் வராண்டா பகுதிகளில், மேற்கூரை பல இடங்களில் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் கட்டிடங்களில் மழைநீர் கசிகிறது.

இந்நிலையில், அனைத்து கட்டிடங்களின் பின்பகுதியிலும், அலுவலக குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. முதன்மை கட்டிட வளாகத்தின் பக்கவாட்டில் பொதுமக்கள் காத்திருப்பு கூடத்தின் அருகில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இவற்றில் பாம்பு உள்ளிட்ட விஷஜந்துகள் நடமாட்டம் இருக்கிறது. குப்பைகளை முறையாக தினசரி அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : collector ,office ,campus ,
× RELATED மண்டல அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், பயிற்சி வகுப்பு