×

அரசு மருத்துவமனை செப்டிக் டேங்கில் கசிவு

விருதுநகர், ஏப். 23: விருதுநகர் அரசு மருத்துவமனையில், அவசர பிரிவு அருகே செப்டிக் டேங்கில் கசிவு ஏற்பட்டு, தேங்கிக் கிடக்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.விருதுநகரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் 480 உள்நோயாளிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நிகராக தரம் உயர்த்தும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன.இந்த வளாகத்தில் மல்லாங்கிணறு சாலையில் அவசர சிகிச்சை பிரிவு உள்ளது. இந்த பிரிவுக்கு விபத்தில் காயமடைந்தோர் மற்றும் அவசர சிகிச்சைக்கு 24 மணி நேரமும் நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த பிரிவுக்கு அருகே 200 அடி தூரத்தில் உள்ள செப்டிக் டேங்க் உடைந்து கழிவுநீர் கசிகிறது. கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதில், கொசுக்கள் உருவாகி சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை பதம் பார்க்கிறது.எனவே, மருத்துவமனை நிர்வாகம், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து, கசிவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : government hospital leak ,
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...