×

இடுக்கி தொகுதியில் 12.34 லட்சம் பேர் வாக்களிக்க ரெடி இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது

மூணாறு, ஏப்.23:  கேரள மாநிலம் முழுவதும் இன்று லோக்சபா  தேர்தல் நடைபெறுகிறது. இடுக்கி தொகுதியில் 12.34 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுபோட தயார்நிலையில் உள்ளனர்.  கேரள மாநிலத்தில் இன்று லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 20 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில்  இடுக்கி லோக்சபா தொகுதியில் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதியில் 12.34 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மக்கள் வாக்களிக்க வசதியாக இடுக்கியில் 196 வாக்குச்சாவடிகள்,  பீர்மேடு 203, மூவாற்றுப்புழா 153, கோதமங்கலம் 157, தேவிகுளம் 195,  உடுப்பன்சோலை 193, பழங்குடி மக்கள் வசிக்கும் இடமலை குடியில் 3 என 1,305  வாக்கு வாக்குச்சாவடிகள்  அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுபதிவு நடக்கிறது. தேர்தலையொட்டி, இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாக்கு பதிவு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று கொண்டு செல்லப்பட்டன. இத்தொகுதியில் தற்போதைய எம்பி ஜோய்ஸ் ஜோர்ஜ் இடது ஜனநாயக முன்னணி(எல்டிஎப்) ஆதரவுடன் மீண்டும் சுயேச்சையாக போட்டியிடுகிறார். கடந்த முறை இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) வழக்கறிஞர் டீன் குரியகோஸ் இரண்டாம்முறையாக இவருடன் மோதுகிறார். பாஜக சார்பில் பிஜூ கிருஷ்ணனும் களத்தில் உள்ளார். இதேபோல் மாநிலம் முழுவதும் உள்ள 20 தொகுதிகளிலும் மும்முனை போட்டியே நிலவுகிறது.

Tags : constituency ,Idukki ,
× RELATED நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை...