×

டெக்னாலஜி சார்ந்த படிப்புக்கு அதிக வேலைவாய்ப்பு உள்ளது

காரைக்குடி, ஏப்.23:  டெக்னாலஜி சார்ந்த படிப்புக்கு அதிகஅளவில் வேலைவாய்ப்புகள் உள்ளது என கல்வி ஆலோசகர் தெரிவித்தார். காரைக்குடியில் சண்முகநாதன் பொறியியல் கல்லூரி சார்பில் பிளஸ் 2, டிப்ளமோ படித்த மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் முத்துராமு வரவேற்றார். கல்லூரி தலைவர் பிச்சப்பா மணிகண்டன் தலைமை வகித்தார். கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி துவக்கிவைத்து பேசுகையில், ‘‘பிளஸ் 2 முடித்ததற்கு பிறகு மாணவர்களுக்கு ஏகப்பட்ட கனவுகள் இருக்கும். எது படித்தாலும் அந்த துறையில் உங்களுக்கு என தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வரும் 2023 முதல் 2025க்குள் உலகம் டிஜிட்டல்மயமாக மாறிவிடும்.  எனவே டெக்னாலஜி சார்ந்த படிப்பை தேர்வு செய்து படித்தால் நிச்சயம் வேலைவாய்ப்பு கிடைக்கும். செல்போனில் அதிக நேரம் செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். புதிய சிந்தனை வேண்டும். திறமை, டெக்னாலஜி வளர்த்துக் கொள்ள வேண்டும். எதிர்கால வாய்ப்பு என்ன என பார்க்க வேண்டும். போட்டிகளில் அதிகஅளவில் கலந்துகொள்ள வேண்டும். அயல்நாட்டு மொழி ஏதாவது ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார். கல்லூரி செயலாளர் விஸ்வநாதன், பேச்சாளர் ஈரோடு மகேஷ், கல்வியாளர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்