×

வாரச்சந்தை அமைக்க வேண்டும் ெபாதுமக்கள் வேண்டுகோள்

தொண்டி, ஏப், 23: தொண்டியில் வார சந்தை இல்லாமல் சுற்றுவட்டார பொதுமக்கள் அதிக விலை கொடுத்து காய்கறிகளை வாங்குகின்றனர். அதனால் தொண்டியில் வாரச் சந்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தொண்டி பேரூராட்சியை மையமாக வைத்து 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதி மக்கள் பெரும்பாலும் தினக்கூலிக்கு செல்வோர்களாக உள்ளனர். மேலும் தொண்டியில் உள்ளவர்கள் அரசு வேலை மற்றும் பல்வேறு வேலைக்கு செல்வோராக உள்ளனர். தொண்டி மார்க்கெட்டிற்கு தினமும் மதுரையிலிருந்து காய்கறி வருகிறது. இதனால் கால தாமதம் ஆவதோடு விலையும் அதிகமாக உள்ளது. மேலும் முதல் நாள் காய்கறிகளை வாங்கியே சமையல் செய்து விட்டு வேலைக்கு செல்கின்றனர். அதனால் தொண்டியில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் வாரச் சந்தை அமைத்தால் வேலைக்கு செல்வோர் குறைந்த விலையில் காய்களை வாங்க வசதியாக இருக்கும். இதுகுறித்து தொண்டி ஜலால் கூறியது, பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு தொண்டியில் வாரச் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை