குடிநீர் பிரச்னையை தீர்க்க பேரிஜம் ஏரியை திறக்க வேண்டும் மன்னவனூர் மக்கள் மனு

கொடைக்கானல், ஏப். 23: குடிநீர் பிரச்னையை தீர்க்க பேரிஜம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என மன்னவனூர் மக்கள் ஆர்டிஓவிடம் மனு வழங்கினர். கொடைக்கானல் மேல்மலை கிராமம் மன்னவனூரில் சுமார் 1500 குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது கொடியேத்தனார் பரப்பாறு நீர்த்தேக்கம். கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீர் பிரச்னையை சரிசெய்யவும், புதிய அணை கட்ட கோரியும் மன்னவனூர்  மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அறிவித்தனர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் நேற்று மன்னவனூர் மக்கள் கொடைக்கானல் ஆர்டிஓ சுரேந்தனிடம் ஒரு மனு அளித்தனர். அதில், ‘மன்னவனூர் கிராமத்தின் குடிநீர் பிரச்னையை தீர்க்க பேரிஜம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். நீர்த்தேக்கத்தில் புதிய அணை கட்ட கூடாது. பரப்பாறு பகுதியில்தான் புதிய அணை கட்ட வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. ஆர்டிஓ கூறுகையில், ‘மன்னவனூர் பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனை தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பரப்பாறு நீர்த்தேக்கம் பற்றிய முடிவை நீதிமன்றம் தான் எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: