போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் நகை திருட்டு '

திருப்பூர், ஏப்.22:  திருப்பூர் கே.வி.ஆர்.நகர் அய்யன் நகரை சேர்ந்தவர் மீனாட்சி (75). இவர், நேற்று முன்தினம் காலை மாத்திரை வாங்க கருவம்பாளையத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, பூச்சக்காடு அருகே 2 பேர் நின்றுள்ளனர். அவர்கள், மீனாட்சியை வழிமறித்த  ‘தாங்கள் மப்டியில் இருக்கும் போலீசார், இந்த பகுதியில் திருடர்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் நகையை கழற்றி கொடுங்கள், பைக்குள் வைத்து தருகிறோம் என்று கூறியுள்ளனர். இதை, நம்பி மீனாட்சி தான் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளார். வெள்ளை காகிதத்தில் வைத்து நகையை மடித்து, மூதாட்டி வைத்திருந்த  மஞ்சள் பைக்குள் வைத்து விட்டு வீட்டுக்கு புறப்படும்படி கூறி 2 பேரும் சென்றனர். வீட்டுக்கு சென்ற மீனாட்சி தனது பையை திறந்து பார்த்தபோது நகையை காணவில்லை. அதன்பிறகே போலீஸ் போல் நடித்து தன்னிடம் இருந்த நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மீனாட்சி திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Related Stories: