முருங்கைக்காய் கிலோ ரூ. 10க்கு விற்பனை

வெள்ளக்கோவில்,ஏப்.22: வெள்ளக்கோவில் முருங்கை கொள்முதல் நிலையத்தில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.10க்கு  விற்பனையானது.

வெள்ளக்கோவிலில் ஞாயிறுதோறும் செயல்படும் முருங்கைகாய் கொள்முதல் நிலையத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள்  நேற்று 10 டன் முருங்கைக்காயை விற்பனைக்கு கொண்டு வந்தனர். விவசாயிகள் கொண்டு வந்த மரமுருங்கை கிலோ ரூ.7க்கும், செடி முருங்கை கிலோ ரூ.10 க்கும் விற்பனை ஆனது. கடந்த வாரம் 10 டன் முருங்கைகாய் விற்பனைக்கு வந்தது கிலோ ரூ.15 க்கு விற்றது  கடந்த வாரத்தை விட இந்த வாரம் கிலோவுக்கு ரூ.5 குறைந்து விற்றது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்,

Related Stories: