வால்பாறை சாலையோரங்களில் சுற்றித்திரியும் வரையாடுகள்

பொள்ளாச்சி, ஏப்.22: பொள்ளாச்சி வால்பாறை சாலையோரங்களில் இைற தேடி  சுற்றித்திரியிம் வரையாடுகளை சுற்றுலா பயணிகள் துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.  பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைகளில், யானை, சிறுத்தை, மான்கள், வரையாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளது. தற்போது வனப்பகுதிக்குள் வறட்சி நிலவுவதால் நீர்நிலைகளையும், உணவு தேடியும், வனவிலங்குகள் சாலைகளை கடந்து ஆழியார் அணைக்கு வந்து செல்கின்றன. புற்கள் இலைகள் என அனைத்தும் காய்ந்த நிலையில் இருப்பதால், ஏராளமான வரையாடுகள், பொள்ளாச்சி-வால்பாறை கொண்டை ஊசி வளைவுகளில் உணவு தேடி வலம் வந்து கொண்டிருக்கின்றன.

  இந்நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, வரையாடு மற்றும் குரங்குகளுடன், செல்பி எடுக்க இறங்குவதால் வனவிலங்குகள், அச்சுறுத்தப்படுவதாகவும் உணவு வழங்குவதாகவும், சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.  இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், ‘வனவிலங்குகளுக்கு உணவு வழங்கினாலும் அவற்றை செல்பி எடுக்க துன்புறுத்தினாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: