காந்தி மார்க்கெட்டுக்கு வழைத்தார் வரத்து அதிகரிப்பு

பொள்ளாச்சி, ஏப். 22: பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டுக்கு, வெளியூர் வாழைத்தார் வரத்து அதிகரித்தது. அதனை பெரும்பாலும் கேரள வியாபாரிகள் வாங்கி சென்றதால், விற்பனை விறுவிறுப்புடன் நடைபெற்றது.  பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டுக்கு  நேற்று தூத்துக்குடி, திருச்சி மாவட்ட பகுதியிலிருந்து வாழைத்தார் வரத்து வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. அதிலும் செவ்வாழை மற்றும் கற்பூரவள்ளி தார்கள் அதிக எடையில் இருந்தது.  மேலும், நேற்று பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கேரள வியாபாரிகள்  வருகை அதிகரிப்பால், விற்பனை விறுவிறுப்புடன் நடந்தது. இதில் கடந்த வாரம் ரூ.1000வரை விற்பனையான செவ்வாழைத்தார் நேற்று ரூ.1300வரை விலைபோனது.  அதுபோல் கற்பூரவள்ளி ரூ.450 முதல் ரூ.650வரையிலும், பூவன்தார் ரூ.400 முதல் ரூ.600வரையிலும், கற்பூர வள்ளி ரூ.600க்கும், மோரீஸ் ரூ.555க்கும், கேரள ரஸ்தாளி ஒருகிலோ ரூ.35க்கும் என விற்பனையானது.

Related Stories: