மயிலாடுதுறை ஐயாறப்பர் ஆலய தேர்த்திருவிழா

மயிலாடுதுறை, ஏப்.22:  மயிலாடுதுறையில் பழைமை வாய்ந்த ஐயாறப்பர் சமேத அறம்வளர்த்த நாயகி ஆலயம் அமைந்துள்ளது.சோழமன்னர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின், சித்திரை பெருவிழா கடந்த10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நடைபெற்றது,  ஐயாறப்பர் மற்றும் அறம் வளர்த்த நாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து, திருத்தேரில் சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளினர். 4 வீதிகளின் வழயேதிருத்தேரோட்டம் நடைபெற்றது. சுவாமி அம்பாளுக்கு மஹா தீபாராதனை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: