வேதாரண்யத்தில் புடலை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

வேதாரண்யம், ஏப்.22: வேதாரண்யத்தில் புடலை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.வேதாரண்யம்  தாலுகா புஷ்பவனம், பெரியகுத்தகை, நாலுவேதபதி, கத்தரிப்புலம்,  தேத்தாகுடி, செம்போடை  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோடை சாகுபடியாக புடலை  சாகுபடி நடைபெறுகிறது. வேதாரண்யம்  தாலுகாவில் கடும் வெயில் நிலவிவரும்  வேளையில் குறைந்த தண்ணீரை கொண்டு அதிக லாபம் பெறும்  புடலை சாகுபடியை  விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சாகுபடியில் குட்டை மற்றும் நெட்டை  ரக புடலை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அதிக லாபம் ஈட்டுகின்றனர். வீட்டிற்கு அருகே உள்ள இடங்களில் சிறிய அளவில் பந்தல் அமைத்து இயற்கை  உரங்களை வைத்து புடலை சாகுபடியை துவங்கி உள்ளனர். இதில் குட்டை ரக புடலங்காய் ரூ.10க்கும், நீண்ட ரக  புடலை ரூ.20க்கும் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்யப்பட்டு அருகில் உள்ள  திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகை அருகே உள்ள பரவை சந்தைக்கு நாள்தோறும்  கொண்டு செல்லப்படுகிறது. குறைந்த நேர உழைப்பில் அதிக லாபம் தரும் இந்த  புடலை சாகுபடியை பெரும்பாலான விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். கூடுதலாக  லாபம் பெற தோட்டக்கலை துறையினர் தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என  விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: