4 நாட்கள் விடுமுறை எதிரொலி போக்குவரத்து நெரிசலில் மத்திய பஸ் நிலையம் தத்தளிப்பு

n ஆம்னி பஸ்கள் இடையூறு

n பயணிகள் கடும் அவதி

திருச்சி, ஏப்.22:  நான்கு நாட்கள் விடுமுறை எதிரொலியால் போக்குவரத்து நெரிசலில் திருச்சி மத்திய பஸ்நிலையம் தத்தளித்ததில் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.  தமிழகத்தின் மையப்பகுதியாக திருச்சி நகரம் விளங்குகிறது. இங்கு உள்ள மத்திய பஸ் நிலையமும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படும் ஒரு பஸ் நிலையமாக இயங்கி வருகிறது. இங்கிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்கள், கோவை, திருப்பூர், தேனி, கம்பம், பழனி, சேலம், சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் மத்திய பஸ்நிலையம் 24 மணி நேரமும் இயங்கும் ஒரு தூங்கா நகரம் போல் செயல்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுவதால் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பஸ்களில் திருச்சிக்கு வந்து இங்கிருந்து தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு பஸ் ஏறி செல்கின்றனர். இதனால் இங்கு ஆயிரக்கணக்காக பயணிகள் வந்தவண்ணம் இருப்பதை காண முடியும். இதன் காரணமாக எந்நேரமும் மக்கள் வெள்ளத்தில் நிரம்பியவாறு மத்திய பஸ்நிலையம் காட்சி அளிக்கும்.

 சாதாரண நாட்களிலேயே மத்திய பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெருக்கடி இருக்கும். அதே போல் ஒவ்வொரு வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் சொந்த ஊர் வந்து மீண்டும் பணிக்கு திரும்பும் பயணிகள் கூட்டத்தால் போலீசார் ஒவ்வொரு வாரமும் சிவராத்திரி போல் விடிய, விடிய போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுவர்.  இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை 18ம் தேதி மக்களவை தேர்தலையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டது. 19ம் தேதி புனித வெள்ளி அரசு விடுமுறை என்பதால் அடுத்து வரக்கூடிய சனி, ஞாயிற்றுக்கிழமையும் சேர்்த்து மொத்தம் 4 நாட்களுக்கு விடுமுறை கிடைத்ததால் பணியாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு கடந்த புதன்கிழமைை இரவே புறப்பட்டு சென்று விடுமுறை நாட்களை சொந்த ஊரில் கழித்தனர்.

 இந்நிலையில் விடுமுறை முடிந்து இன்று பணிக்கு திரும்ப வேண்டும் என்பதால் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பயணிகள் மாலை 6 மணி முதலே குவியத்தொடங்கினர். மேலும் லாபம் ஈட்டுவதற்காக ஒவ்வொரு கோட்டத்தை சேர்ந்த அரசு பஸ்களும், ஆம்னி பஸ்களும் திருச்சியில் குவிந்தது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளிலேயே திருச்சி மத்திய பஸ்நிலையம் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பிக்கும், தற்போது 4 நாட்கள் விடுமுறை முடிந்து பணிக்கும் செல்லும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமையில் கூடியதால் மாலை 6 மணிக்கு மத்திய பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் நுழையவே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

 இதனால் மாநகர போக்குவரத்து போலீசார் அரிஸ்டோ, பழைய திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட், மிளகுபாறை பிரிவு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பஸ்களை நீண்ட வரிசையில் நின்றதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த போக்குவரத்து நெரிசலால் மதுரை மார்க்கமாக வரும் பயணிகள் அரிஸ்டோ ரவுண்டானா பகுதியிலேயே இறக்கிவிடப்பட்டனர். அதே போல் திண்டுக்கல், கோவை, சேலம் மார்க்கமாக வந்த பஸ்கள் மிளகுபாறை பிரிவிலேயே பயணிகளை இறக்கிவிட்டனர். இதனால் பயணிகள் மத்திய பஸ்நிலையத்திற்கு நடந்தே சென்று அங்கிருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தங்கள் பஸ் பயணத்தை தொடர்ந்தனர்.  இதற்கு முக்கிய காரணமாக ஒவ்வொரு கோட்டம் சார்பில் பஸ்களை இயக்கி வருவாய் ஈட்டுவதற்காக திருச்சிக்கு பஸ்களை அதிகளவில் பஸ்களை அனுப்புவதே இந்த போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கும் வரை போக்குவரத்து நெரிசல் என்பது திருச்சியின் தீராத தலைவலியாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மீண்டும் ஆம்னி பஸ்கள் ஆதிக்கம்

ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மத்திய பஸ்நிலையத்திற்கு மற்ெறாரு தலைவலியாக ஆம்னி பஸ்களின் அராஜகம் உள்ளது. ஏற்்கனவே பழைய திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகில் ரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான இடத்தில் ஆம்னி பஸ்் ஸ்டாண்ட் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இரவு நேரங்களில் அந்த பஸ் ஸ்டாண்டிற்கு ஆம்னி பஸ்களை கொண்டு செல்லாமல் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள டவுன் பஸ்கள் நிற்கும் இடத்தில் ஆம்னி பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் எரிகிற அடுப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல், ஏற்கனவே உள்ள போக்குவரத்து நெரிசல் போதாது என ஆம்னி பஸ்களாலும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. இதற்கு போக்குவரத்து போலீசாரும் ஒரு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காரணம் பணியில் ள்ள போக்குவர்தது போலீசார் சிலர் கப்பம் வாங்கிக்கொண்டு ஆம்னி பஸ்களை கண்டும் காணாதது ேபால் பார்த்து செல்கின்றனர் என்பதும் குற்றச்சாட்டாக உள்ளது.

அதிக கட்டணம்

வசூல்நேற்று பயணிகள் கூட்டத்தினை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் ரூ.1000ம் வரை சென்னைக்கு பயண கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதனால் சிலர் வேறு வழியின்றி அதிக பணம் கொடுத்து ஆம்னி பஸ்களில் பயணத்தை மேற்கொண்டனர். இதனை அவ்வப்போது வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தால்தான் இதுபோன்று கட்டண கொள்ளையை தடுக்க முடியும். டைமிங் இல்லாததால் நெரிசல்பஸ்களுக்கு டைமிங் வாங்கிக்கொண்டு அந்த நேரத்தில் மட்டும் பஸ்களை அனுமதித்தால் இதுபோன்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசலுக்கு ஒரே நேரத்தில் ஒரே பகுதிக்கு குறிப்பாக சென்னை பகுதிக்கு அதிகளவில் பஸ்கள் குவிவதே இந்த போக்குவரத்து நெரிசலுக்கு காரணம். இதனை முறைப்படுத்தி டைமிங் கொடுத்து இயக்கினால் இதுபோன்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்

மத்திய பஸ் நிலையம் மட்டுமின்றி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலும் நேற்று பயணிகள் கூட்டம் அலைமோதியது. பிளாட்பார்ம்கள், ரயில் நிலையம் முன்பு என அனைத்து பகுதிகளிலும் பயணிகள் குவிந்த வண்ணம் இருந்தனர். இதனால் அங்கு அசாம்பவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க, ரயில்வே பாதுகாப்பு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் நேற்று திருச்சி வழியாக இயக்கப்பட்ட அனைத்து ரயில்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

Related Stories: