கொண்டத்து சமயபுரம் மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா

மொடக்குறிச்சி, ஏப்.22:  ஈரோடு கோணவாய்க்கால் கொண்டத்து சமயபுரம் மாரியம்மன் மற்றும் அங்காளம்மன் கோயில் சித்திரை குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். ஈரோடு கோணவாய்க்கால் கொண்டத்து சமயபுரம் மாரியம்மன் மற்றும் அங்காளம்மன் கோயில் சித்திரை குண்டம் திருவிழா கடந்த 12ம் தேதி  பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து வாஸ்துசாந்தி, கிராமசாந்தி, அக்னி குண்டம் சுத்தம் செய்தல், பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்துவந்து அபிஷேக பூஜை நடந்தது. அக்னி பாலம் பற்ற வைத்தல், சீதாளதேவியாகம், அம்பாளுக்கு சகலதிரவிய அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.  நேற்று முன்தினம்  அதிகாலை கோயில் பூசாரி மாது குண்டம் இறங்கியதும், தொடர்ந்து பக்தர்கள் பூக்குண்டம் இறங்க தொடங்கினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திபரவசத்துடன் பூக்குண்டம் இறங்கினர். தொடர்ந்து பொங்கல் விழா, மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று திரவிய மலர் அபிஷேக்தை தொடர்ந்து மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.  விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் மொடக்குறிச்சி காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: