பட்டுக்கோட்டையில் வீட்டின் கதவை உடைத்து 40 பவுன், பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு

பட்டுக்கோட்டை,ஏப். 22: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சிவக்கொல்லை எஸ்.வி.நகர் 4வது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (52). இவரது மனைவி சுமதி (46). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் ரவிச்சந்திரன் தனது குடும்பத்துடன் மதுரை மேலூரில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு தனது வீட்டுக்கு வந்தபோது முன்பக்க கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டின் முன்புற நிலைக்கதவின் தாழ்ப்பால் நெம்பி உடைத்து பீரோவில் வைத்திருந்த 40 பவுன் மற்றும் ரூ.20 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசாருக்கு ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்தார். நேற்று போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மேலும் தஞ்சையில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர். இதைதொடர்ந்து பட்டுக்கோட்டை நகர போலீசில் நேற்று ரவிச்சந்திரன் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: