பாமக அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு மனு

தஞ்சை,  ஏப். 22: வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை ஏற்பட  வேண்டும் என்றால் பாமக அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென தேர்தல்  ஆணையத்துக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர்  சதாசிவக்குமார் தெரிவித்துள்ளார்.இந்திய தேர்தல் ஆணையத்துக்கு  தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்றகழக நிறுவனத் தலைவர் சதாசிவக்குமார்  கோரிக்கை மனு அனுப்பினார். அதில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற  தொகுதி இடைத்தேர்தலில் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் அரியலூர்  மாவட்டம் பொன்பரப்பியில் மிகப்பெரிய கலவரம் நடந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட  சமூகத்தை சேர்ந்தவர்களை வாக்களிக்க விடாமல் பாமகவினர் வன்முறையை  கட்டவிழ்த்து உள்ளனர். தலித் சமூகத்தை சேர்ந்த பெண்களை மானபங்கம்  செய்துள்ளனர். வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டுள்ளது. ஆனால்  இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் இதுவரை எந்த பதிலும் தராமல் மவுனம் காத்து  வருகிறது. 100 சதவீதம் நேர்மையாகவும், உண்மையாகவும் வாக்களிக்க வேண்டுமென  இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது.

Advertising
Advertising

ஆனால் வாக்களிக்க சென்ற  குறிப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இந்த  சம்பவத்துக்கு காரணமான பாமகவை இந்திய தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும்.  முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள குற்றவாளிகள் அனைவரையும் தேசிய  பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின்  மீது வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்றால் இதை செய்ய  வேண்டும். தேர்தல் காலங்களில் தமிழகத்தில் வன்முறையை கட்டவிழ்த்துவிடும்  பாமக மீது இந்திய தேர்தல் ஆணையம் காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: