உத்தாணி ஆதிதிராவிடர் தெருவில் குழாய்களில் கலங்கலாக வரும் குடிநீர் பொதுமக்கள் அவதி

பாபநாசம், ஏப். 22: உத்தாணி ஆதிதிராவிடர் தெருவில் உள்ள குழாய்களில் குடிநீர் கலங்கலாக வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.பாபநாசம் அடுத்த உத்தாணி ஆதிதிராவிடர் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த தெருவில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. இந்த பகுதிக்கு விநியோகிக்கும் குடிநீர், மஞ்சள் நிறத்தில் காவி படிந்து வருகிறது. இதனால் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் 3 தலைமுறையாக  வசிக்கிறோம். இடநெருக்கடியால் அவதிப்படும் எங்களுக்கு குடியிருப்பு மனை வழங்க வேண்டும். குடிநீர் காவி படிந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.எனவே இங்குள்ள குழாய்களை புதுப்பிக்க வேண்டும். புதிதாக குடிநீர் டேங்க் கட்டித்தர வேண்டும். இந்த பகுதியில் உள்ள குளத்தை விரைந்து தூர்வார வேண்டும். போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை விரைந்து செப்பனிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: