×

க.பரமத்தி ஒன்றிய பகுதியில் வடிசோறு பூஜை வழிபாட்டுடன் மாரியம்மன் திருவிழா துவக்கம்

க.பரமத்தி, ஏப்.22: க.பரமத்தி ஒன்றியத்தில் புன்னம் மற்றும் நடுப்பாளையம், உப்புபாளையம், ஆகிய மூன்று வெவ்வேறு பகுதிகளில் மாரியம்மன் கோயில்களில்  ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 3நாட்கள் திருவிழா கொண்டாடி வருகின்றனர்.
இந்த கோயில்களின் திருவிழாவையொட்டி காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சி கடந்த 7ம்தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் அபிஷேகம், பூஜைகள் நடைபெற்று வந்ததுடன், 18 குக்கிராமங்களில் வீடு வீடாக சென்று படி விளையாட்டு பூஜை நடைபெற்று வந்தது.

நேற்று (ஞாயிறு) பக்தர்களால் பொங்கல் வைக்கப்பட்டு ஒவ்வொரு பொங்கல் பானையிலும் பொங்கல் எடுக்கப்பட்டு அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து படையலிட்டு வடிசோறு பூஜை நடைபெற்றது. இன்று (22ம்தேதி) கோயிலில் இருந்து புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் கொண்டு வரப்பட்டு. அபிஷேகம், மாவிளக்கு, பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடக்கிறது, நாளை (23ம்தேதி) கிடாவெட்டு, மாவிளக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை, ஆராதனைகள் செய்யப்பட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது.


Tags : festival ,Mariamman ,area ,Vasusoru Pooja ,Union ,
× RELATED சீர்காழி அருகே சட்டநாதபுரம் சந்தன மாரியம்மன் கோயிலில் காவடி திருவிழா