×

குப்பம் பெரியகாண்டியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாடு

க.பரமத்தி, ஏப்.22:  க.பரமத்தி ஒன்றியம் குப்பம் கிராமத்தில் பெரியகாண்டியம்மன் கோயில் உள்ளது.  இந்த கோயிலில் அம்மன்,  விநாயகர், குன்னுடையான், பொன்னர், சங்கர், தங்காயி ஏழு கன்னிமார் ஆகிய சுவாமிகளுக்கு தினமும் ஒரு கால பூஜைகளும் அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தினசரி ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தர்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகின்றனர். இக்கோயிலில் சித்ராபவுர்ணமியையொட்டி  பக்தர்கள் நன்மைக்காக காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு  அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.   அனைவருக்கும் அன்னதானம்  வழங்கப்பட்டது.


Tags : Chitra Poonam ,
× RELATED தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்