×

கரூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் இன்று வினியோகம்

கரூர், ஏப். 22: கரூர் அரசு கலைக் கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் அரசு கலைக் கல்லூரியில் 2019-20ம் கல்வி ஆண்டிற்கான முதலாமாண்டு இளங்கலை, இளம் அறிவியல், இளம் வணிகவியல் மற்றும் இளம் வணிக நிர்வாகவியல் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கல்லூரி அலுவலகத்தில் இன்று (22ம்தேதி) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ. 50 எனவும், எஸ்டி, எஸ்சி மாணவர்களுக்கு விண்ணப்பம் இலவசமாக வழங்கப்படும் எனவும் (சாதிச் சான்று நகல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்)  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Karur Government Arts College ,
× RELATED 29 பயனாளிகளுக்கு A7.99 லட்சத்தில்...