×

க.பரமத்தி ஒன்றிய அளவில் 2 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி

க.பரமத்தி, ஏப்.22:க.பரமத்தி ஒன்றிய அளவில் 100 சதவீத தேர்ச்சியை சின்னதாராபுரம் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு வேவ்வேறு அரசு மேல்நிலைப்பள்ளிகள் பெற்றுள்ளது. சின்னதாராபுரம் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் 41 பேர் தேர்வெழுதி அனைவரும் தேர்ச்சி பெற்று 100சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.இதே போல சின்னதாராபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 59மாணவிகள் தேர்வெழுதி அனைவரும் தேர்ச்சி பெற்று 100சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.தும்பிவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 69மாணவர்களில் 68பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 99சதவீத தேர்ச்சியாகும்.எலவனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 47மாணவர்களில் 46பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98சதவீத தேர்ச்சியாகும்.    புன்னம் ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 46மாணவர்களில் 44பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி 95சதவீதத்தை பெற்றுள்ளது.க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 99மாணவர்களில் 89பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 90சதவீதத்தை பெற்றுள்ளது.



Tags : government schools ,Union ,
× RELATED பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி...