×

கரூர் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

கரூர், ஏப்.22: கரூர் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கரூர் பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள்:கரூர் சட்டமன்ற தொகுதி ஆண் 88066, பெண் 94272, இதரர் 1மொத்தம் 1,82,339. சதவீதம் 77.71. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி. ஆண் 78372, பெண் 86901, மொத்தம் 1,65,273, 80.51.கிருஷ்ணராயபுரம் சட்டமன்றதொகுதி.ஆண் 84358, பெண் 88401. இதரர் 28. மொத்தம் 1,72,784. சதவீதம் 84.21.மணப்பாறை சட்டமன்றதொகுதி. ஆண் 101911, பெண் 105763, மொத்தம் 2,07,674, சதவீதம் 75.60.வேடசந்து£ர் சட்டமன்றதொகுதி. ஆண் 97235, பெண் 101378, மொத்தம் 1,98,613, சதவீதம் 78.36.விராலிமலை சட்டமனற தொகுதி. ஆண் 82818, பெண் 87518, இதரர் 2, மொத்தம் 1,70,338, சதவீதம் 79.82.மொத்தம் ஆண் 5,32,760, பெண் 5,64,233, இதரர் 31, மொத்தம் 10,97,024. சதவீதம் 79.11கரூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைமையத்திற்கு மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்ட 6அறைகளில் சட்டமன்ற தொகுதி வாரியாக வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதல் அடுக்கு: மத்திய எல்லை பாதுகாப்பு படையின் வீரர்கள் (பிஎஸ்எப்) 23பேர் துப்பாக்கி ஏந்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள 6அறைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.2ம்அடுக்கு: தமிழ்நாடு சிறப்புகாவல் படைவீரர்கள் ஒரு இன்ஸ்பெக்டர்,. 40போலீசார் பாதுகாப்பு பணியில்உள்ளனர்.3ம்அடுக்கு:  கரூர் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள், தாலுகா காவல்நிலைய காவல் அதிகாரிகள் காவலர்கள் 178பேர் உளளிட்ட மொத்தம் 243அதிகாரிகள், மற்றும் காவலர்கள் தற்போது பாதுகாப்பு பணியில் தினமும் உள்ளனர். இவர்கள் சுழற்சிமுறையில் இருகுழுவினராக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்ட ஏடிஎஸ்பி பாரதி, மேற்பார்வையில் ஒவ்வொரு சுழற்சியிலும் ஒரு டிஎஸ்பி பொறுப்பில் இருக்கும் படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் பாதுகாப்புக்காக ஒரு வஜ்ரா அதிரடிப்படை வாகனம், ஒருவிரைவுப் படை வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளன. வாக்குஎண்ணும் கட்டட மேற்கூரையின்மீதும் பாதுகாப்பு காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.மேலும்அங்கு வெடிபொருள்சோதனைநிபுணர்கள் உதவியுடன் வெடிகுண்டு சோதனை கருவிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

Tags : constituency ,Karur Lok Sabha ,center ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தேனா? அண்ணாமலை பேட்டி