×

கரூர் வழியாக கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

கரூர், ஏப்.22. கரூர் வழியாக கோடைகால சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் ஜங்ஷன் ரயில் நிலையம் ஈரோடு ஜங்ஷனுக்கு அடுத்தபடியாக பெரிய ரயில் நிலையமாக ஏகிரேடு அந்தஸ்துடன் திகழ்கிறது. கரூர்-சேலம் அகல ரயில்பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டதால் கரூரில் இருந்து நான்கு திசையிலும் ரயில்போக்குவரத்து நடைபெறுகிறது. கிழக்கே திருச்சி, நாகைவரையும், மேற்கே ஈரோடு, கோவைவரையும், தெற்கே திண்டுக்கல் மற்றும் தென்மாவட்டங்களுக்கும், வடக்கே சேலம் மற்றும் வெளிமாநிலங்களுக்கும் இருப்புப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது, புகைபோன்ற சுற்றுச்சூழல் பாதிப்பை போக்கும் வகையிலும், வேகத்தை அதிகரிக்கும் வகையிலும் ரூ.321கோடி மதிப்பில் ஈரோடு-கரூர்-திருச்சி, சேலம்-கரூர்/திண்டுக்கல் இருப்புப்பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது.

எனினும்புதிய ரயில்கள் இயக்கத்தில் கரூர் புறக்கணிக்கப்படுவதாக பயணிகள் தொடர்ந்து கூறிவந்த நிலையல் தறபோது சுவிதா சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரயில்களில் இடநெருக்கடி தவிர்க்க சுவிதா சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி, கேரளமாநிலம் எர்ணாகுளம், திருவனந்தபுரம் உள்ளிட்ட 10நகரங்களுக்கு சென்னையில் இருந்து இந்த ரயில்கள் இயக்கப்படுகிறது. எனினும்கரூரில் இருந்து ஒரு ரயில் கூட இயக்கப்படவிலலை. சிறப்பு ரயில்கள் இயக்கத்தில் தொடர்ந்து கரூர் புறக்கணிக்கப்படுகிறது. தீபாவளி சிறப்பு ரயில், கோடைகால சிறப்பு ரயில்கள் எதுவும் இல்லை. இந்நிலையில் சுவிதா சிறப்பு ரயில்களும் கருர் வழியாக இயக்கப்படவில்லை.

இதற்கு பயணிகள் கடும்அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.,இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கரூர்- சேலம்அகலப்பாதை அமைத்தும் ரயில்சேவை விரிவாக்கம் செய்யப்படாமலேயே இருக்கிறது. இருப்புப்பாதை அமைக்கப்பட்டு. மின்பாதையாகவும் மாற்றப்பட்டுவிட்டது. எனினும் புதிய ரயில்கள் இயக்கத்தை பொறுத்தவரை ரயில்வே அமைச்சகம் தான் முடிவு செய்யும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.  அனைத்து அடிப்படைக் கட்டமைப்புகள் இருந்தும் கரூர் மாவட்டம் பயன் பெறும் வகையில் இயக்காமல் உள்ளனர்.கோடை கால சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்  என  ரயில் பயணிகள் தெரிவித்தனர்.

Tags : Karur ,
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்