சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

திருப்பரங்குன்றம், ஏப்.22: திருப்பரங்குன்றம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதியுறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பரங்குன்றம் அருகில் உள்ள மூலக்கரை போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக மாறி வருகிறது. குறிப்பாக கல்லூரி வளாகம் இருப்பதால் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும். இங்குள்ள மூலக்கரை பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரங்களில் பொதுமக்கள் செல்வதற்கு இடையூறாக பழக்கடைகள் மற்றும் சேர் விற்பனை கடைகள் புதிது, புதிதாக முளைத்து வருகின்றன.

இவர்கள் சாலையோர நடைபாதையின் பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இந்த கடைகளுக்கு வரும் வாகனங்கள் சாலைகளில் அப்படியே நிறுத்தப்படுவதால் அடிக்கடி இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அவல நிலையும் ஏற்படுகிறது. மேலும் இவ்வாறு சாலையில் எந்த அனுமதியுமின்றி ஆக்கிரமித்து கடை நடத்துபவர்களால் சாலையோர சிறு வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். எனவே விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த சாலையோர கடைகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை குறைத்து விபத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: