மாநகர் திமுக இன்று ஆலோசனை

மதுரை, ஏப். 22: மதுரை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் தளபதி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- மே 19ல் நடக்கும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் மாநகர் மாவட்ட திமுக தேர்தல் பணி குறித்து ஆலோசிக்க ஏப்ரல் 22ல் (இன்று) காலை 10.30 மணிக்கு மாநகர் மாவட்ட திமுக செயல்வீரர் கூட்டம் நடக்கிறது. பசுமலையிலுள்ள கோபால்சாமி திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பொறுப்புகுழு உறுப்பினர்கள், பகுதி, வட்ட செயலாளர்கள், அனைத்து அணி நிர்வாகிகள், செயல்வீரர்கள் திரளாக பங்கேற்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: