திருமங்கலம்-சேடபட்டி சாலை பல இடங்களில் பஞ்சர்

திருமங்கலத்திலிருந்து ஆலம்பட்டி, சௌடார்பட்டி வழியாக சேடபட்டி செல்லும் ரோடு மிகவும் சேதமடைந்து காணப்படுதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருமங்கலத்திலிருந்து சேடபட்டிக்கு ஆலம்பட்டி, திரளி, செளாடார்பட்டி வழியாக ரோடு செல்கிறது. சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் முக்கிய ரோடாக திகழும் சேடபட்டி ரோட்டில் ஆலம்பட்டியிலிருந்து சேடபட்டி வரையில் பல்வேறு இடங்களில் ரோடு குண்டும் குழியுமாக காட்சிதருகிறது. இந்த பல்லாங்குழி ரோட்டில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் முதுகுவலி, உடல் வலி உண்டாகி வருகிறது. பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் முதல் டூவிலர்கள் வரையில் பயணிக்க லாயக்கற்ற இந்த ரோட்டினால் பழுதாகி வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த ரோட்டினை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் நெடுஞ்சாலைத்துறையினர் புதுப்பித்தனர். ஆனால் தரமற்ற சாலை போடப்பட்டதால் ரோடு குண்டும் குழியுமாக மாறி பயணிக்க லாயக்கற்ற ரோடாக மாறிவிட்டது. இதனால் இரவில் பயணிக்கும் பலரும் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் மீண்டும் திருமங்கலம் சேடபட்டி ரோட்டினை புதுப்பித்து தரமான ரோடு அமைக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: