மதுரையில் ஈஸ்டர் பண்டிகை திருநாள் உயிர்தெழுந்த ஏசு பிரானுக்கு சிறப்பு ஆராதனைகள்

மதுரை,  ஏப். 22:  கிறிஸ்தவர்களின் முக்கிய திருநாட்களில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை மதுரையில் நேற்று  கொண்டாடப்பட்டது. கடந்த மார்ச் 6ம் தேதி சாம்பன் புதன் முதல் தவக்காலம் கடைபிடித்த கிறிஸ்தவர்கள், தவக்காலத்தின் கடைசி வாரமாக புனித வாரத்தை  கடைபிடித்தனர். புனித வாரத்தின் முதல் நாள் நிகழ்வாக குருத்தோலை ஞாயிறு தினம் கடந்த 14ம் தேதி கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த வாரம் முழுவதும் புனித வாரம் கடைபிடிக்கப்பட்டது. புனித வாரத்தின் 2வது நிகழ்ச்சியாக புனித வியாழன் அனுசரிக்கப்பட்டது. அன்று, தேவாலயங்களிலும் பாதம் கழுவும் நிகழ்ச்சியும், மறுநாள் வெள்ளிக்கிழமை சிலுவைப்பாதை வழிபாடும் நிகழ்வும் நடந்தது.

இதனைத் தொடர்ந்து சிலுவையில் அறையப்பெற்று உயிர்நீத்த, ஏசு பிரான் மீண்டும் உயிர்த்தெழுந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில், கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியுடன், ஈஸ்டர் பண்டிகை திருநாளை நேற்று கொண்டாடினர். அதிகாலை 5 மணிக்கு அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன. கிறிஸ்தவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஆராதனையில் கலந்து கொண்டு, உயிர்த்தெழுந்த ஏசிபிரானை வழிபட்டனர். அப்போது, ஈஸ்டர் பண்டிகையை குறிக்கும் மகிழ்ச்சியான கீதாங்கள் இசைக்கப்பட்டன. பின்னர் அனைவருக்கும் பிரசாதமாக கேக், தேனீர், ஈஸ்டர் முட்டைகள் வழங்கப்பட்டன. முன்னதாக ஈஸ்டர் திருநானை முன்னிட்டு நேற்று முன்தினம்(சனிக்கிழமை) நள்ளிரவு அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்து உயிர்த்தெழுந்த சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த ஈஸ்டர் பண்டிகை திருநாளுடன் கிறிஸ்தவர்களின் 40  நாட்கள் தவக்காலம் நிறைவு பெற்றது. 

Related Stories: