நீர்வரத்து வாய்க்காலை குப்பைகள் ஆக்கிரமிப்பு

செம்பட்டி, ஏப்.22:  ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் நீர்வரத்து வாய்க்காலை ஆக்கிரமித்து பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இதனை தூர்வார வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். சின்னாளபட்டி அருகே ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் சுகாதார சீர்கேடு அதிகரித்து வருகின்றது. ஆலமரத்துப்பட்டி ஊராட்சிக்கு செல்லும் என்.பஞ்சம்பட்டி பிரிவு பாலத்தின் அடியில் கண்ணாடி கழிவுகள், குப்பைக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. சிறுமலையிலிருந்து வரும் மழைத்தண்ணீர் இப்பாலத்தின் அடியில் சென்று அருகில் உள்ள ரெங்கசமுத்திரம் கண்மாய்க்கு செல்கிறது. ஊராட்சி நிர்வாகம் பாலத்தின் அடியில் நீர்வரத்து வாய்க்காலை மறைத்தவாறு குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை குவித்து வருவதால் அப்பகுதி குப்பை கிடங்காக மாறி வருகிறது. நான்கு வழிச்சாலையில் செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர ஓட்டிகளுக்கு திறந்தவெளி கழிப்பிடமாக அந்த இடம் மாறி வருகிறது. ஊராட்சி நிர்வாகத்தின் மெத்தனதால் நீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: