போலீஸ் ரோந்து பணியை தீவிரமாக்க வலியுறுத்தல்

பழநி, ஏப்.22: பழநியில்  குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பழநியில் தமிழக மக்கள் முன்னணி அமைப்பு சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடந்த கூட்டத்திற்கு மாநில மகளிரணி தலைவி சந்திரகலா தலைமை வகித்தார். மாநில தலைவர் ஜாபர் சாதிக், மாவட்ட தலைவர் செந்தில், மாநில செயலாளர் சையது ராஜா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பழநி அருகே சின்னக்கலையம்புத்தூர் சமத்துவபுரத்திற்கு குடிநீர் விநியோகம் சரிசெய்ய வேண்டும். பழநியில் அம்பேத்கர் சிலையை நிறுவ தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநி நகரில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். பழநி காந்தி மார்க்கெட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோடை விடுமுறை துவங்கி உள்ளதால் பழநி வழித்தடத்தில் செல்லும் திருச்செந்தூர், பாலக்காடு, சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும். குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: