இஸ்லாமியர், மீனவர்கள் ஓட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்

விழுப்புரம், ஏப். 22:  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் மாநில செயலாளர் அன்சாரி கூறுகையில், அண்மையில் நடந்த பொள்ளாட்சி பாலியல் சம்பவத்தை யாரும் மறக்க முடியாது. தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் சீண்டல்கள் நடந்து வருகின்றன. இனிவரும் காலங்களில் இதனை தடுக்க தவ்ஹீத் ஜமாஅத் தீவிர பிரசாரத்தை நடத்த உள்ளது.

மாவட்டங்கள் தோறும் பெண்கள் விழிப்பாக இருக்க வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பாலியலுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். பாலியல் குற்றங்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி தண்டனை விதிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து வருகின்றனர். அரபு நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் தண்டனை வழங்கப்படுவதை போலவே இங்கும் இச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.  நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பல இடங்களில் இஸ்லாமியர், மீனவர்கள் ஓட்டுகள் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் நடுநிலை இல்லாமல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருப்பதைத்தான் இது காட்டுகிறது. பிஜேபிக்கு எதிரான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. தேர்தல் ஆணையம் தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், வருமானவரித்துறை ரெய்டு போன்ற நடவடிக்கையாலும் அதன்மீது மக்களுக்கு சந்தேகம் வரத்தொடங்கியுள்ளது என்றார்.

Related Stories: