ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்

விழுப்புரம், ஏப். 22: விழுப்புரம் கிறிஸ்து அரசர் தேவாலயம், சி.எஸ்.ஐ., சேவியர், புனித ஜென்மராக்கினி, கல்வாரி ஏ.ஜி., சர்ச் உட்பட மற்றும் பல்வேறு கத்தோலிக்க தேவாலயங்களில் நள்ளிரவு ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது இயேசு உயிர்ப்பை சித்தரிக்கும் காட்சிகளும், திருமுழுக்கு சடங்குகளும் இடம் பெற்றன. இதில் கிறிஸ்தவர்கள் கையில் மெழுகுவர்த்திகளுடன் பங்கேற்று பிரார்த்தனை செய்ததோடு, ஒருவருக்கு ஒருவர் ஈஸ்டர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். 40 நாள் தவக்காலத்தில் கிறிஸ்தவர்களில் பலர் அசைவ உணவு சாப்பிடாமல் உபவாசம் இருந்து வந்தனர். ஒருசிலர் ஒருவேளை உணவு மட்டுமே உண்டு வந்தனர். ஈஸ்டர் கொண்டாட்டத்துடன் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதனால் நேற்று காலை இறைச்சி, மீன் கடைகளில் கூட்டம் அலைமோதியது. உளுந்தூர்பேட்டை: ஆசனூர் கிராமத்தில் உள்ள நித்திய வார்த்தை ஊழியத்தின் மூலம் காளான்துதி சபையின் சார்பில் போதகர் சாலமோன் தலைமையில் ஈஸ்டர் ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வின்சென்ட் கலந்துகொண்டு ஈஸ்டர் செய்தியை வழங்கி பேசினார். இதே போல் எறையூர் புனித ஜெயமாலை அன்னை ஆலயம், உளுந்தூர்பேட்டையில் உள்ள அற்புத குழந்தைஏசு, ஆற்காடு லுத்தரன் திருச்சபை, ஏஜி சர்ச், எம்பிஏ சபை உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்

களிலும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Related Stories: