×

சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து ஆட்சியர் நள்ளிரவில் ஆலோசனை

பண்ருட்டி, ஏப். 22: பண்ருட்டி அருகே தேர்தலுக்கு பிறகு அடிக்கடி மோதல் ஏற்படுவதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதியில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நள்ளிரவில் அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். பண்ருட்டி  அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தேர்தல் முடிந்த பிறகு அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இதில் அதிகளவில் மோதல்கள்  ஏற்படுவதால் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு  வருகின்றனர். இதன் காரணமாக நேற்று முன்தினம் பண்ருட்டி தாலுகாவுக்கு  உட்பட்ட அனைத்து டாஸ்மாக் கடைகளும் திடீரென மாலை 6மணிக்குள் மூடப்பட்டன.  நேற்றும் பிரச்னை ஏற்படும் இடங்களில் கடைகள் திறக்கப்படவில்லை. இதனிடையே  நேற்று முன்தினம் நள்ளிரவு, மாவட்ட ஆட்சியர்  அன்புச்செல்வன் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை  குறித்து கேட்டறிந்தார். இதில் பண்ருட்டி அதனை சுற்றியுள்ள கிராம  பகுதிகளில் பிரச்னை ஏற்படும் இடங்கள் குறித்தும், அதனை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.  அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரபாகரன், தாசில்தார் கீதா, மண்டல துணை  தாசில்தார் தனபதி, வருவாய் ஆய்வாளர்கள் கிருஷ்ணா, சேகர், தேவநாதன், கிராம  நிர்வாக அலுவலர் தங்கமணி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : lawyer ,
× RELATED இந்திய வழக்கறிஞருக்கு விருது