×

கோடையை சமாளிக்க கை கொடுக்கும் வீராணம் ஏரி

சேத்தியாத்தோப்பு, ஏப். 22: கடலூர் மாவட்டம் புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி மக்களின்முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது வீராணம் ஏரி. தற்போது கோடை காலத்திலும் இது நிரம்பியிருப்பதால் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வீராணம் ஏரியின் தற்போதைய நீர் இருப்பு 47.1 அடியாகும். ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து இல்லை. சென்னை குடிநீருக்கு வினாடிக்கு 66 கனஅடி நீர் செல்கிறது. இப்போதைய நிலவரப்படி இருக்கும் நீரை கொண்டு சென்னை குடிநீருக்கு இன்னும் மூன்று மாதத்திற்கு தண்ணீர் அனுப்ப முடியும். இதுகுறித்து இப்பகுதியினர் கூறுகையில், வறண்டு கிடக்கும் நேரத்தில் ஏரியில் தண்ணீர் நிரம்பியிருப்பது நாங்கள் எதிர்பாராதது. இதே நிலை தொடர்ந்து இருந்தால் இப்பகுதி மக்களின் அனைத்து தேவைக்கும் தண்ணீர் பயன்படும். அதுபோல் நிலத்தடி நீர், சுற்றுப்புறசூழல் போன்றவை பாதுகாக்கப்படும். அதனால் அரசு தொடர்ந்து ஏரியின் நீர் இருப்பை ஒரே அளவாக பாதுகாத்து வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags : lake ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு