×

செங்கம் அருகே சூறைக்காற்றுடன் கனமழை ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்தது விவசாயிகள் வேதனை

செங்கம், ஏப்.22: செங்கம் அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்தது. செங்கம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் காற்று பலமாக வீசியதால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்தன. குலை தள்ளி வெட்டுக்காக காத்திருந்தபோது வாழை மரங்கள் சாய்ந்தது விவசாயிகளை வேதனை அடைய செய்தது.

வறட்சியின் கோரப்பிடியில் வாழை மரங்களுக்கு உரம் மற்றும் தண்ணீர் பாய்ச்சி வைத்த நிலையில் மரங்கள் சாய்ந்து நாசமானதாக விவசாயிகள் கதறினர். எனவே சூறைக்காற்றில் நாசமான வாழை மரங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags : ground ,Sengam ,
× RELATED தாலுகா அலுவலகத்தில் திடீர் தீ; தீயணைப்பு துறையினர் அணைத்தனர்