பிளஸ்-2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

ஈரோடு, ஏப். 21:   ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடந்து. இத்தேர்வினை ஈரோடு, கோபி என இரண்டு கல்வி மாவட்டத்திலும் சேர்த்து 24ஆயிரத்து 316 மாணவ-மாணவிகள் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளில் 23ஆயிரத்து 155பேர் தேர்வு பெற்று,தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் 95.23சதவீகிதம் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது.  இந்நிலையில், தேர்வு பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் படித்த பள்ளிகளிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நேற்று முதல் 26ம் தேதி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதன்படி நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும் தற்காலிக மதிப்பெண் சான்றதிழ் தலைமையாசிரியர் சீல் மற்றும் கையெழுத்துடன் வழங்கப்பட்டது. ஆனால் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மட்டும் நேற்று பூட்டு போடப்பட்டு இருந்ததால் சான்றிதழ் மற்றும் தலைமையாசிரியரின் கையெழுத்து பெற முடியாமல் மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.இந்நிலையில், பிரிண்டர் பழுது காரணமாக   மாணவிகளை வெளியில் உள்ள கம்ப்யூட்டர் சென்டரில் மதிப்பெண் பட்டியலை எடுத்து வரும்படியும் அறிவுறுத்தியுள்ளோம். பிரிண்டர் சரி செய்த உடன் பள்ளியிலேயே தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். வெளியே எடுத்து வந்த மதிப்பெண் பட்டியல்களும் சரிபார்த்து சீல் வைத்து கையெழுத்திட்டு மாணவிகளுக்கு வழங்கி வருகிறோம்,என அந்தபள்ளி  தலைமையாசிரியர் சுகந்தி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: