பெண்கள் 3 பேர் மாயம்

கோவை, ஏப்.21: கோவையில், இளம்பெண்கள் உட்பட 3 பேர் மாயமானார்கள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை கணபதி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(36). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சுகன்யா(26), என்ற மனைவியும், ஒன்றரை வயதில் யஷ்விகா என்ற மகளும் உள்ளனர்.இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு வீட்டில் இருந்த சுகன்யா, குழந்தை யஷ்விகாவுடன் வெளியில் சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். இரவு வெகுநேரம் ஆகியும் அவர்கள் வராததால் அதிர்ச்சியடைந்த முருகேசன் பல இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. புகாரயைடுத்து சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை கணபதியை சேர்ந்த லோகநாதன்  மகள் வினோதினி(25). எம்.பி.ஏ பட்டதாரியான இவர் நேற்று முன் தினம் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.  பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.கோவை கணபதியை அடுத்த காந்திமாநகரை சிதம்பரம் மனைவி சுப்பம்மாள்(65). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்..

Advertising
Advertising

Related Stories: