காப்பீட்டு திட்ட பலன்களை பெற தரச்சான்றிதழ் கட்டாயம் சுகாதாரத்துறை உத்தரவு

கோவை, ஏப் 21: காப்பீட்டு திட்ட பலன்களை பெற மருத்துவமனைகள் தேசிய தரச்சான்றிழ் பெறுவது கட்டாயம் என, சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகளின் மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் மூலம் பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதன் வாயிலாக பல்வேறு சிகிச்சைகளை கட்டணம் செலுத்தாமல் பெறமுடியும். சிகிச்சைகளுக்கான செலவு தொகையை அந்தந்த மருத்துவமனைகளுக்கு அரசுகள் வழங்குகின்றன. இதில் குறிப்பிட்ட அளவு பணம், சிகிச்சை அளித்த மருத்துவமனைகளின் வளர்ச்சிக்காக வழங்கப்படுகிறது. இதன் மூலம் மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடிகிறது.  இந்நிலையில் காப்பீட்டு திட்டங்களின் வாயிலாக கிடைக்கும் பலன்களை பெற, தேசிய தரச்சான்றிதழ் பெறுவது கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து மருத்துவமனைகள், தரச்சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கையை துவங்கியுள்ளன. சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ மருத்துவமனைகளில் பராமரிக்கப்படும் தூய்மை,சுகாதாரம்,வசதிகள் ஆகியற்றின் அடிப்படையில், அவற்றிற்கு, தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. காப்பீட்டு திட்டபலன்களை பெற, இது கட்டாயமாக்கபட்டுள்ளது. இதன் வாயிலாக மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்படுவதுடன், மருத்துவமனைகளின் சுகாதாரம்,தூய்மை, வசதிகள் அதிகரிக்கும். இதை கருதிஉத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும் நோயாளிகளுக்கு தரமிக்க சிகிச்சை கிடைக்க வழிவகை செய்யும்’ என்றனர்

Related Stories: