மேட்டுப்பாளையம் அருகே காப்பு காட்டில் சித்ராபவுர்ணமி விழா கொண்டாட தடை

மேட்டுப்பாளையம், ஏப்.21: மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஓடந்துறை காப்புக்காட்டில் சாமி ஊர்வலம் நடத்த தடை விதித்ததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலை அடிவாரப்பகுதியில் சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட ஓடந்துறை காப்புக்காடு உள்ளது. இங்கு வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் அவைகளின் தாகம் தீர்க்க தண்ணீர்த்தொட்டி கட்டப்பட்டுள்ளது. அதேபோல் இந்த வனப்பகுதியில் பழைமைவாய்ந்த  கருப்பராயசுவாமி கோயிலும் உள்ளது. இந்த கோயிலுக்கு மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஊமப்பாளையம் பகுதியை கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் சித்ராபவுர்ணமி அன்று இரவு வனப்பகுதிக்குள்  சென்று பொங்கல் வைத்து வழிபடு செய்வர். இதன் படி நேற்று முன் தினம் இரவு 10 மணிக்கு ஓடந்துறை வனப்பகுதியில் பொங்கல் வைத்து வழிபாடு செய்ய பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர். ஆனால் வனப்பகுதிக்குள் இரவு நேரங்களில் பொது மக்களை தங்க ஐகோர்ட் கோர்ட் தடைவிதித்தாக கூறி வனத்துறையினர் பொதுமக்களுக்க அனுமதி மறுத்தனர்.  இதனால், வனத்துறையினருக்கும் பொதுமக்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன் தலைமையில், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் 25 பேர் சென்று பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். இதற்கிடையே பொதுமக்கள் தங்களை வனப்பகுக்கு சென்று பொங்கல் வைக்க அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் சிலர் நடனமாடியும் பாட்டுபாடியும் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்தற்கு சென்ற போலீசார் கிராம மக்களை சமாதானம் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  பின், தடையை மீறி பொதுமக்கள்  வனப்பகுதிக்குள் சென்று இரவு வனப்பகுதிக்குள் தங்கி பொங்கல் வைத்து வழிபட்டனர்.

Advertising
Advertising

Related Stories: