பிளஸ்2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

கோவை, ஏப். 21:  கோவை மாவட்ட பள்ளிகளில் பிளஸ்2 மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நேற்று வினியோகிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி துவங்கி 19ம் தேதி வரை நடந்தது. இதனை கோவை மாவட்டத்தில் உள்ள 348 பள்ளிகளை சேர்ந்த 15,352 மாணவர்கள், 19,648 மாணவிகள் என மொத்தம் 35 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதில், 14,383 மாணவர்கள், 18,870 மாணவிகள் என மொத்தம் 33 ஆயிரத்து 253 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி சதவீதம் 95.01. இதனை தொடர்ந்து மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் நேற்று முதல் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இதில், மாணவர்களின் புகைப்படம், பெயர், பதிவு எண், மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்று இருந்தது. இதனை மாணவர்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். மேலும், நேற்று விடுமுறை நாள் என்பதால் பெரும்பாலான பள்ளிகளில் பிளஸ்2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கவில்லை. நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பள்ளி வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் மாணவர்கள் 90 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

Related Stories: