நாளை மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடக்காது

கோவை, ஏப் 21: மக்களவை தேர்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்ததால், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஒரு மாதமாக மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறவில்லை.சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தம் முடிவுகள் வெளியாகும் வரை தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனால், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறாது. தேர்தல் முடிவுகள் வெளியாகி தேர்தல் விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டால் தான் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறும்.

Advertising
Advertising

Related Stories: