மக்களவைத் தேர்தலன்று நாங்குநேரியில் மதுவிற்ற வாலிபர்கள் மூவர் கைது

நாங்குநேரி, ஏப். 21; நாங்கு

நேரியில் மக்களவைத் தேர்தலன்று மது விற்ற வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைதுசெய்ததோடு 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த 18ம் தேதி தேர்தல் பாதுகாப்பு பணிகளை எஸ்பி அருண் சக்திகுமார் ஆய்வு மேற்கொண்டார். இதில் நாங்குநேரி அருகே பெரும்பத்து- இளையநேரி சாலையில் டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மது விற்றுக்கொண்டிருந்த சிலரை மதுபாட்டில்கள் மற்றும் பைக்குகளுடன் பிடித்து நாங்குநேரி போலீசில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி நடத்திய விசாரணையில் மது விற்றவர்கள் நாங்குநேரியைச் சேர்ந்த சங்கரன் (40), அப்துல்காசீம் நகரை சேர்ந்த மாடசாமி மகன் மகேந்திர பிரதாப் (35), ஏர்வாடியைச் சேர்ந்த சுடலை (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். அப்போது நாங்குநேரி நகர அதிமுக செயலாளர் பரமசிவன் (35) மற்றும் சிலர் சேர்ந்து மதுபாட்டில்களை கொடுத்து கூடுதல் விற்பனை செய்ய கூறியதாகவும் போலீசை கண்டதும் பைக்கில் ஏறி தப்பிச்சென்றதாகவும் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த இன்ஸ்பெக்டர் சாந்தி, அதிமுக நகரச் செயலாளர் பரமசிவன் உள்ளிட்ட மேலும் 3 பேரைத் தேடி வருகிறார். இதனிடையே இதுபோன்று நாங்குநேரி பகுதியில் நடக்கும் பல்வேறு சம்பவங்களை கண்டும்,காணாமல் இருந்து வரும் போலீசார் ஆளும்கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories: