சங்கரன்கோவில் அருகே பைக் மீது லாரி மோதி காயமடைந்தவர் சாவு

சங்கரன்கோவில், ஏப். 21:  சங்கரன்கோவில் அருகே பைக் மீது லாரி மோதி காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். சங்கரன்கோவில் அருகேயுள்ள சென்னிகுளத்தை சேர்ந்தவர் பாண்டியன் (70).  ராஜஸ்தான் மாநிலத்தில் மின்வாரியத்தில் வேலைபார்த்து ஓய்வுபெற்ற இவர், மக்களவைத் தேர்தலன்று வாக்குப்பதிவு செய்வதற்காக பைக்கில் சுப்பிரமணியபுரத்திற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மினி லாரி, இவரது பைக் மீது மோதியது.  இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பாண்டியன் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.  இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: